Saturday, 30 August 2014

Everyday 10 kms walking on Hills to go to School

மலையூர் மலைக்கிராமத்தில் சாதனை மாணவர்கள்: பள்ளிக்கு செல்ல தினமும் 10 கி.மீ., நடை பயணம்

பதிவு செய்த நாள்: ஆக 30, 2014 00:16மதுரை: பாட்டன் காலத்தில் 'தினமும் 10 கி.மீ., நடந்து போய் நான் படித்து வளர்ந்தவன்,' என்று பல கதைகளை முன்னோர் குரல்களில் நம் காதுகள் கேட்டிருக்கும். இப்போதும் இது போல் பயணித்து பள்ளி செல்வோர் இருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால் கரடுமுரடான ஒரு மலைப்பாதையில் தினமும் 10 கி.மீ., நடந்து, அதன் பின் பஸ்சில் பயணித்து படிக்கிறார்கள் ஒரு மலைக்கிராமத்து மாணவர்கள் 60 பேர்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் வலையபட்டி கிராமத்தை கடந்து, 3 கி.மீ., பயணித்தால் எல்லைப்பாறை என்ற இடம் வரும். அந்த இடத்தில் இருந்து மலைப்பாதையில் 5 கி.மீ., நடந்தால் அழகிய மலை கிராமம் வரவேற்கும். அதுதான் மலையூர். தாண்டிக்குடி, சிறுமலை போன்ற ஒரு விவசாய பூமி. அனைத்து மலைப்பயிர்களும் இங்கு கிடைக்கும்.வாகனங்கள் ஏறாத இந்த மலையில் கோவேறு கழுதைகள் மக்களின் சுமைகளை சுமந்து, தங்கள் வயிற்றையும் நிரப்புகின்றன.

மலையூரின் பெருமை

மலையூரின் பெருமைகள் பல. கொசு இல்லாத கிராமம். காகம் பறக்காது. எப்போதாவது ஏதாவது காகம் தென்பட்டால் ஏதோ தீட்டு அல்லது குற்றம் கிராமத்தில் நிகழ்ந்திருக்கிறது எனக் கருதி, அதற்கு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். ஊரில் யாரும் செருப்பு அணிந்து நடப்பது இல்லை. விஷ ஜந்துக்கள் ஏதாவது கடித்தால், இங்குள்ள ஐயனார் நீர்சுனையில் தண்ணீர் குடித்தால், உடலில் விஷம் ஏறாது, உயிருக்கு எந்த தீங்கும் வராது என்பது போன்ற அதீத நம்பிக்கை வைத்துள்ளனர் மக்கள்.இந்த கிராமத்திற்கு புதிதாக யாராவது வந்தால் அவர்களுக்கு உணவு கொடுத்து அனுப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 150க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் படித்த ஒருவர் வக்கீலாகவும், இன்னொருவர் போலீசாகவும் உள்ளனர்.லிங்கவாடி ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்தில் துவக்கப்பள்ளி உள்ளது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்காக மலையின் கீழ் உள்ள முலையூர், நத்தத்திற்கு தினமும் 60 மாணவ, மாணவியர் செல்கின்றனர்.

செருப்பில்லா பயணம்

மலையில் இருந்து விரைவாக இறங்கினால் ஒரு மணி நேரம், ஏறுவதற்கு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை ஆகிவிடும். மாணவர்கள் காலையில் மலையில் இருந்து கீழே இறங்கி, அரசு பஸ்சில் பள்ளி செல்கின்றனர். மாலையில் 5.30 மணிக்கு எல்லப்பாறைக்கு பஸ்சில் வந்து இறங்குகின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்து மலையில் ஏறுகின்றனர். புத்தக சுமை ஒரு பக்கம். பலரது கால்களில் செருப்பு இல்லை. ஆறாம் வகுப்பு மாணவி முதல் பிளஸ் 2 மாணவி வரை, இந்த மலைப்பயணத்தில் எங்கும் நிற்காமல் நடைபோடுவது ஆச்சரியம். இவர்கள் வீட்டிற்கு செல்லும் போது இரவு 7 மணியாகிவிடும். இவர்களிடம் இருக்கும் தைரியம், மனஉறுதி இன்றைய மாணவ சமூகத்திற்கு ஒரு பெரும் எடுத்துக்காட்டு, இவர்கள் அத்தனை பேரையுமே சாதனை மாணவர்கள் என கொண்டாடலாம்.

வெளிச்சம் இல்லாத பாதை

மாணவ, மாணவிகள் கூறியதாவது:மாலை 5.30 மணிக்கு இருட்டத் துவங்கிவிடும். மலைப்பாதையில் வெளிச்சம் இருக்காது. ஒருவித அச்ச உணர்வுடன் தான் ஏறுவோம். மலை ஏறிய பின் ஒவ்வொருவரும் அவரவர் தோட்டங்களில் உள்ள வீடுகளுக்கும், கிராமத்திற்கும் சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கு யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்படும் போது, அவர்களை கட்டில் கட்டி கீழே கொண்டு செல்ல வேண்டும். கர்ப்பிணி பெண்களை நினைத்தாலே பாவமாக இருக்கும். மிகவும் பழமையான இந்த கிராமத்தில் இன்னும் ரோடு வசதி இல்லாதது ஒரு பெரும் குறை. தற்போது ரோடு அமைக்கும் அளவிற்கு பாதை உள்ளது. கரடுமுரடான பாறைகளை அகற்றி, எளிதாக நடந்து செல்லும் வகையில் ரோடு அமைத்தால் போதும். கஷ்டம் இல்லாமல் நாங்கள் வந்து சென்றுவிடுவோம், என்கின்றனர்.

படிப்பது சுமையல்ல

பிளஸ் 2 மாணவர் சுரேஷ், ''நாங்கள் படிப்பதற்கு நடப்பதை ஒரு சுமையாக கருதவில்லை. 60 பேர் பள்ளிகளில் படிக்கிறார்கள். தினமும் 55 பேராவது பள்ளி செல்வோம். கல்லுாரியில் படிப்போர் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். எங்களுக்குள் தலைவர் என்று யாரும் இல்லை. ஆனால் மலை ஏறும் போதும், இறங்கும் போதும் ஒற்றுமையாக இருப்போம். ஒருவருக்கொருவர் புத்தக சுமைகள் மாற்றிக் கொள்வதிலும் உதவிகள் செய்வோம். சேர்ந்தே மலை ஏறி, இறங்க வேண்டும் என்பதை பெற்றோரும் உத்தரவாக வைத்திருக்கின்றனர், ஊர் கட்டுப்பாடாகவும் இது உள்ளது. அதை நாங்கள் மீறுவது இல்லை'', என்கிறார்.

காட்டுமாடுகள் கவனம்

விவசாயி பார்த்தி, 37, '' இரவு யாரும் மலை ஏறமாட்டார்கள். காட்டு மாடுகள் வரும். நான் துவக்கப்பள்ளி படிப்போடு முடித்துவிட்டேன். நான் படிக்கும் போது இப்போது உள்ள எண்ணிக்கையில் மாணவர்கள் மலையின் கீழ் சென்று படிக்கவில்லை. தனிமையில் செல்ல பெற்றோர் அனுமதிக்கவில்லை. அதனால் படிப்பு பாதியில் நின்றது,'' என்கிறார்.

மலையூர் கிராமத்து மாணவர்களின் வாழ்வியல் இன்றைய நம் மாணவ சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு முறை இந்த கிராமத்திற்கு தனியாக, குழுவாக 'விசிட்' செய்து பாருங்கள். ஒரு நாள் மலை ஏறுவதற்கே என்ன பாடுபடுவீர்கள் என்பதை உணரவைக்கும். கல்விக்காக தினமும் மலை ஏறும் இந்த கிராம மாணவர்களை எப்படி பாராட்டினாலும் தகும். படிப்பை போல் ரோடு தான் இவர்கள் அனைவரின் ஒரே கனவு.


Monday, 18 August 2014

Diary issued to Pondicherry Govt. Schools Students

Courtesy_
Dinamalar ePaper

அரசு பள்ளி மாணவர்களுக்கு டைரி வழங்க... : கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை

பதிவு செய்த நாள்: 18 ஆக 2014  00:40

-நமது சிறப்பு நிருபர்-

புதுச்சேரியில் முதன் முறையாக, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நாட்குறிப்பு (மாணவர் கையேடு) வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடபுத்தகம், சீருடை, சிற்றுண்டி, சைக்கிள் உள்ளிட்ட பல இலவச திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், பொதுத் தேர்வு முடிவில் தனியார் பள்ளிகளை ஒப்பிடும்போது, அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது.

தனியார் பள்ளிகளில், ஒவ்வொரு மாணவருக்கும் நாட்குறிப்பு (டைரி) வழங்கி, அதில் மாணவர்களின் படிப்பு பற்றிய விபரங்கள் பெற்றோர் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. 

குறிப்பாக, ஹோம் ஒர்க், தேர்வு தொடர்பான விவரங்கள், தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றது என பல்வேறு விபரங்களை நாட்குறிப்பில் எழுதி, பெற்றோர்களுக்கு தினந்தோறும் தெரியப்படுத்தப் படுகிறது.

இதனால் தங்கள் குழந்தைகளின் படிப்பு பற்றிய விபரங்களை பெற்றோர் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.

தனியார் பள்ளிகளில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வரும் நாட்குறிப்பு வழங்கும் முறையை, அரசுப் பள்ளிகளில் அமல்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முதன்முறையாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 150 மாணவர்களுக்கு, வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் நாட்குறிப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தொடர்ந்து படிப்படியாக, தில்லையாடி வள்ளியம்மை பள்ளி, சாரம் எஸ்.ஆர்.சுப்ரமணியம் பள்ளி உள்ளிட்ட ஐந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நாட்குறிப்பு வழங்கப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நேரத்தில், தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் வகையிலும், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், நாட்குறிப்பு (மாணவர் கையேடு) வழங்கும் திட்டம், பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.


Report on Toilets in TN Govt. Schools

Courtesy_
Dinamalar ePaper

Also read the related stories

Report on toilets in Tamil Nadu govt. schools sparks political row

CHENNAI, August 12, 2014

V.S.PALANIAPPAN and L.RENGANATHAN

Opposition raises hue and cry over lack of adequate facilities

A recently published report by the Human Resource Development (HRD) Ministry on a substantial number of government schools in Tamil Nadu either having no toilets or barely managing with dysfunctional toilets has sparked a political row, with the Opposition parties crying for immediate action.

The HRD Ministry figures in the report that pertains to schools run by various States point out that of the 37,002 government schools in Tamil Nadu, as many as 1,442 girls’ schools and 4,278 boys’ schools are without toilets.

In the other category, as many as 958 girls’ schools and 1,159 boys’ schools have only ‘dysfunctional’ toilets. In sum, for all practical purposes, 7,837 schools in Tamil Nadu go without toilets.

The district-wise findings for Tamil Nadu show that the numbers of schools without toilets are above 100 in 16 districts, while in 13 other districts, the numbers are below 100 in each.

Chennai district alone has toilet facilities in all Government schools.

Among the States, Andhra Pradesh, Bihar, Jharkhand, Madhya Pradesh, Odisha, Telangana and West Bengal have more Government schools without toilets than Tamil Nadu.

On the other hand, the data show that Gujarat, Goa, Sikkim and Karnataka are better off in this aspect than Tamil Nadu.

Seizing the HRD Ministry’s report, Opposition parties led by the DMK have raised a hue and cry over the lack of adequate toilets in Tamil Nadu, close on the heels of the Chief Minister, Jayalalithaa announcing on the floor of the Assembly a slew of schemes to improve the sanitation facilities in Government schools.

The DMK, alleging that the ruling party’s claims were off the mark, sought an explanation from the Government.

While the Dravidar Kazhagam leader K. Veeramani, joining issue, urged the Centre to provide funds as Education was in the ‘Concurrent List’, the PMK founder-leader S. Ramadoss said the State Government would do well to provide for basic amenities in all Government schools than keep expanding freebies. 

Recalling that the Supreme Court in October 2011 had asked all the State Governments to ensure that schools are provided with temporary toilet facility by November 2011 and permanent toilets by December that year, Dr. Ramadoss regretted that the court order has not yet been complied with by many States.

Dr. Ramadoss said that the AIADMK regime had so far spent about Rs. 1.70 lakh crore on freebies and Rs. 1,880 crore expended from the MLA’s Constituency Development Fund.

If just one per cent of those outlays had been spent on providing toilets in schools, this situation could have been averted, he added.

The Chief Minister, it may be recalled, had recently told the house that the AIADMK Government after a survey had provided toilets in as many as 2,057 schools.

In addition, Ms. Jayalalithaa had also announced an allocation of Rs. 72.90 crore for construction of class rooms and 270 toilets exclusively for girl students in elementary and middle schools.


Also read the related stories

தமிழகத்தின் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லை: மனிதவள மேம்பாட்டு அமைச்சக அறிக்கை

ஆகஸ்ட் 08, 2014,10:56 IST

புதுடில்லி: "தமிழகத்தில், 15 சதவீத அரசு பள்ளிகளில், அதாவது, 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை" என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 5,720ல், 1,442 பள்ளிகள், பெண்கள் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளத்தில்

நாடு முழுவதும், மாநில வாரியாக, அதில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக உள்ள அரசு பள்ளிகள் எண்ணிக்கை, அதில், எத்தனை ஆண்கள் அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை; எத்தனை அரசு பெண்கள் பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை என்ற புள்ளி விவரங்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில், வெளியிடப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் மொத்தம் உள்ள, 37,002 அரசு பள்ளிகளில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.17 ஆயிரம் கோடி

இதன்படி, மொத்த அரசுப்பள்ளிகளில், 15.45 சதவீத பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 - 14ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறைக்கு நடப்பாண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளிலும், அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருந்தும், அரசு பள்ளிகளில் அடிப்படையான கழிப்பறை வசதியே முழுமையான அளவிற்கு நிறைவேற்றப்படவில்லை என்பது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி சட்ட சபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

எது சரி?

அதில், அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவீதம் கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், கழிப்பறை வசதிகள் இல்லாத, 2,057 பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது என முதல்வர் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு அறிக்கையில், கழிப்பறை வசதி இல்லாத 5,720 பள்ளிகள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில், எந்த புள்ளி விவரம் சரியானவை என தெரியவில்லை.

கல்வித்துறை கருத்து என்ன?

கல்வித்துறை வட்டாரம் தெரிவித்த கருத்து: பட்ஜெட்டில், அதிக நிதி ஒதுக்கப்படுவதாக தெரிந்தாலும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிதி, சம்பளத்திற்கே செலவாகி விடுகிறது. மீதமுள்ள நிதி, மாணவர்களுக்கான இலவச திட்டங்களுக்கு போய்விடுகிறது.

ஆர்.எம்.எஸ்.ஏ., (மத்திய இடை நிலைக் கல்வி திட்டம்) மற்றும் எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) ஆகியவற்றுக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டுதான், ஓரளவிற்கு, அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.

கழிப்பறை இல்லாத பள்ளிகள் விவரம்

மாவட்டம்
மொத்த பள்ளிகள்
பெண்கள் பள்ளி
ஆண்கள் பள்ளி
சென்னை
332
0
0
கோவை
1,963
70
270
கடலூர்
1,417
24
82
தர்மபுரி
1,362
92
134
திண்டுக்கல்
1,305
182
84
ஈரோடு
1,791
43
134
காஞ்சிபுரம்
1,425
8
51
கன்னியாகுமரி
518
0
5
கரூர்
805
0
236
கிருஷ்ணகிரி
1,669
36
259
மதுரை
1,230
161
222
நாகை
919
16
32
நாமக்கல்
995
27
234
பெரம்பலூர்
940
40
198
புதுக்கோட்டை
1,533
73
286
ராமநாதபுரம்
1,062
67
150
சேலம்
1,728
60
229
சிவகங்கை
1,111
55
161
தஞ்சாவூர்
1,370
16
38
நீலகிரி
429
8
35
தேனி
528
21
7
திருவள்ளூர்
1,454
81
130
திருவாரூர்
930
9
22
தூத்துக்குடி
704
17
69
திருச்சி
1,272
40
116
நெல்லை
918
62
138
திருவண்ணாமலை
1,968
11
110
வேலூர்
2,229
32
257
விழுப்புரம்
2,116
161
390
விருதுநகர்
979
30
129


Also read the related stories

கழிப்பிட வசதி இல்லாத அரசு பள்ளி: புதர்களை தேடி செல்லும் மாணவியர்

பதிவு செய்த நாள்: 18 ஆக 2014 02:11

மேட்டூர்: சாணாவூர் அரசு மேல்நிலைபள்ளியில், போதிய கழிப்பிட வசதி இல்லாததால், மாணவியர் தொலைவில் உள்ள புதர்மண்டிய பகுதிக்கு, இயற்கை உபாதைக்கு சென்று, திரும்புகின்றனர். 

மேட்டூர் தாலுகா, கோல்நாயக்கன்பட்டி பஞ்.,ல் அரசு துவக்கபள்ளி இருந்தது. இந்த பள்ளி சில ஆண்டுகளுக்கு முன், அரசு மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால், பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால், பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், கழிப்பிடம் கட்ட இடம் இல்லை. இதனால், பல ஆண்டுகளாக, துவக்கப்பள்ளி கட்டிடத்தில் தான் இன்னமும், மேல்நிலைப்பள்ளி வகுப்பு நடக்கிறது. 

போதிய வகுப்பறைகள் இல்லாததால், பெரும்பாலான வகுப்பு பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியிலேயே நடக்கிறது. பள்ளி தரம் உயர்த்தப்பட்ட போதிலும், கட்டுவதற்கு இடம் இல்லாததால், துவக்கபள்ளிக்கு கட்டிய கழிப்பிடத்தையே, இன்னமும் மாணவ, மாணவியர் பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. 

இதனால், பள்ளி இடைவேளையின்போது, மேல்நிலைபள்ளி மாணவர்கள், பள்ளியில் இருந்து சற்று தொலைவில் உள்ள புதர்பகுதிக்கு சென்று திரும்பும் அவலம் நீடிப்பது, பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


Disclaimer

This Blog Spot is meant for publishing reports about the usage of RTE Act (The Right of Children to Free and Compulsory Education Act, 2009) so as to create an awareness to the general public and also to keep it as a ready reckoner by them. So the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".Furthermore, the Blog Authors are no way responsible for the correctness of the materials published herein and the readers may verify the concerned valuable sources.

Labels

10 Kms. (1) 1993 (1) 2005 (1) 2009 (1) 2010 (1) 2012 (2) 2013 (2) 2014 (1) 2015 (2) 2016 (1) 2018 (1) 2019 (1) 25% Quota for Poor Students (7) 5th Standard (1) 8th Standard (1) Abdul Kalam (1) ABIDe (1) Accountancy (1) Act (2) Admission criteria (2) Aided Schools (3) Allahabad High Court (1) Amendment (1) Andhra Pradesh (1) Answer Sheet (2) Article (22) Avinash Mehrotra case (1) Bangalore (1) Bar-coded Answer Sheet (1) Bare Acts (1) Best Teachers Awards (1) Bihar (1) Bill (1) Biology (1) Board Exams (6) Botany (1) Caning (1) Cartoon (1) CBSE (5) Character Code (1) Cheating (1) Chemistry (1) Chennai (1) Chief Minister (1) Child Rights and You (CRY) (1) Children (3) Christians (1) CIC (1) Closure (1) Commission for Protection of Child Rights (1) Compulsory pass (1) Corporal punishment (1) Curse (1) Delhi High Court (2) Demerits (1) Diary (1) Dinamalar (4) Dinamani (8) Directory (1) Disobeying order (1) Display Board (1) Do's and Don'ts (1) Do's and Dont's (1) Don Bosco School (1) Download (2) Dress Code (1) Editorial (1) Education (4) Education Department (2) Exam Materials (1) Examinations (16) FAQs (1) Fee defaulter (1) Fees Determination Committee (2) Fees Determination Rules (1) Fine (1) Five Judges Bench (1) Foolish Policy (1) Frontline (1) Fundamental Right (2) Gazette (1) Goa CM (1) Good Manners (1) Govt. Schools (4) Govt. Servants (1) Grace Marks (1) H.Sc. (7) Hair cut (1) Hills (1) How to Learn (1) HRD Ministry (1) Implementation (1) Income Certificate (1) Indian Kanoon (2) Interview (1) Judgment (2) Karnataka (2) Kids (3) KUSMA (1) Labour Acts (1) Labour Laws (1) Links (3) Madras High Court (7) Madurai (1) Madurai Bench (1) Manapet Govt. School (1) Maths (2) Matriculation Schools (2) Merits (1) MGR (1) Mid Day Meal Scheme (1) Minimum Land requirements (3) Minor School Students (1) Minority Institutions (1) Mountains (1) National Building Code (1) NCF (1) New Indian Express (1) New Pattern of Exam (1) NGO (1) Online (1) Opinion (1) Parents (2) Personal Liberty (1) Plus 1 Exam (1) Plus 2 Exam (7) Politicians (1) Pondicherry (10) Poor Students (2) Practical Examination (1) Preparedness (1) President of India (1) Private Schools (8) Public Exam (1) Punishment (1) Punjab (1) Question Paper (3) Recognition (3) Results (4) Right to Life (1) RTE Norms (1) RTE Rules (2) RTI (1) RTO (1) Rules (1) S.V.Chittibabu Commission (1) Safety standards (1) Salient features (1) Samacheer Kalvi (6) School Bags (2) School Buildings (1) School students (1) School Vehicle (1) Schools (3) Science (1) Secondary Education Board Bill (1) Selling Books (1) Service Book (1) Song (1) SSLC (12) State Consumer Disputes Redressal Commission (1) Student (1) Summer Vacation (1) Supreme Court (5) Syllabus (1) Tamil Nadu (9) Tamil Subject (1) Teachers (3) Teachers' Day (2) THE HINDU (7) Thirukural (2) Three Judges Bench (2) Time Table (2) Times of India (1) TIPS (2) Toilets (1) Tough & Easy (1) Traffic Rules (1) Transfer Certificate (1) Two-wheeler (1) Unaided Schools (5) Uniforms (1) Upholding RTE Act (3) USE Act (1) Uttar Pradesh (1) Walking (1) Who's Who (1) Wikipedia (1) Window of opportunity (1) Young Wards (1) Zoology (1) எது சமச்சீர்க் கல்வி? (2) எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் (1) கல்வி கற்கும் வழி (1) தி இந்து (1) மன அழுத்தம் (1) முப்பருவ கல்விமுறை (1)

Popular Posts