Tuesday, 23 August 2011

Jaya: Samacheer Kalvi curriculum half-baked

அமல்படுத்திய பின் அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? : முதல்வர்
  
பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 22, 2011, 23:09 IST

சென்னை: "அரைவேக்காடான சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பற்றி நாங்கள் கூறிய போது, யாருமே கேட்கவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக, திட்டம் அமல்படுத்திய பின், இப்போது பல்வேறு குறைகளைக் கூறி அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி?'' என்று, சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டிய உறுப்பினர்களிடம், முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

பீம்ராவ்-மார்க்சிஸ்ட்: பட்ஜெட்டில், கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 4.25 சதவீதமாக உள்ளது. இதை, 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக 109 பரிந்துரைகளை, முத்துக்குமரன் குழு, முந்தைய அரசுக்கு பரிந்துரைத்தது. அதில், ஒருசில பரிந்துரைகளை மட்டுமே தி.மு.க., அரசு ஏற்றுள்ளது. அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சண்முகம்: "சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள்' என்று, முதல்வர் கூறினார். ஆனால், இருக்கின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று, உங்களது கட்சியைச் சார்ந்தவர்களும், மற்றவர்களும் கோர்ட்டுக்கு சென்றனர். அதன் காரணமாக, இன்று திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பீம்ராவ்: முந்தைய அரசில், துணைவேந்தர் பணியிடங்கள் பணத்திற்கு விற்கப்பட்டன. ம.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,விற்கு வந்தார் என்பதற்காகவே, சபாபதி மோகனுக்கு துணைவேந்தர் பதவியை வழங்கினர். உயர்கல்வியில் பெரும் ஊழல் நடந்தது. அதுகுறித்து விசாரிக்க, தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
தொடக்கப் பள்ளிகளில் ஏ.பி.எல்., திட்டம் அமலில் இருக்கிறது. இப்போது, சமச்சீர் கல்வித் திட்டம் வந்துள்ளதால், எந்த திட்டத்தை அமல்படுத்துவது என்பதில் குழப்பம் இருக்கிறது. மேலும், சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் பாட அட்டைகள் அச்சடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர்: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் திட்டம் (ஆக்டிவ் பேஸ்டு லேர்னிங்-ஏ.பி.எல்.,) இருக்கிறது. பாடத்திட்டம் சார்ந்த கார்டுகளை அச்சடித்து, அதன் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதல் வகுப்பிற்கு கார்டுகளை அச்சடித்து விட்டனர். இதர வகுப்புகளுக்கு கார்டுகளை அச்சடிக்காமல், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மட்டும் நடவடிக்கை எடுத்தனர். பழைய பாடத் திட்டத்தின் கீழ் கார்டுகளை அச்சடித்ததில், 32 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளனர்.

குரு - பா.ம.க.,: சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: இவர்களது கொள்கை, நிமிடத்திற்கு நிமிடம் மாறும்போல் இருக்கிறது. அரைவேக்காடான சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த முடியாது. தரத்தை உயர்த்த கால அவகாசம் தேவை. அடுத்த ஆண்டு அமல்படுத்துகிறோம் என்று கூறினோம். கம்யூனிஸ்ட், பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அதன் தலைவர்களும் கேட்கவில்லை. இருக்கின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துங்கள் என குரல் கொடுத்தனர். திட்டத்தை அமல்படுத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், இப்போது திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இப்போது, பாடப்புத்தகம் சரியில்லை; சரி செய்யுங்கள் என அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வீணடிப்பதா என்று, பலர் கேள்வி கேட்டனர்.
பாடப் புத்தகங்களின் தரத்தைப் பற்றி பத்திரிகைகளில் தினமும் செய்தி வருகிறது. காமராஜர் மறைந்த தேதியை தவறாகத் தந்துள்ளனர். லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தேதியை தவறாக அச்சிட்டுள்ளனர். இந்த லட்சணத்தில் பாடப் புத்தகங்கள் இருந்தால், மாணவர்கள் எப்படி படிக்கப் போகிறார்களோ என கவலையாக உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Courtesy_

Also read the related stories

"Samacheer Kalvi curriculum half-baked"

SPECIAL CORRESPONDENT

CHENNAI, August 23, 2011

"Government forced to implement it from this year because of political pressure"

Describing the Samacheer Kalvi curriculum as "half-baked", Chief Minister Jayalalithaa said her government was forced to implement it from this academic year because of political pressure.

Intervening in the discussion on school education, Ms. Jayalalithaa said her government was not against Samacheer Kalvi but sought one year timeframe to improve the quality of curriculum. However, leaders of political parties, including Left parties and Pattali Makkal Katchi (PMK) insisted on its implementation from this year itself.

The government went to the court and was now implementing it this year as per the court's direction, she said adding that there was no point in complaining now (about the low quality of textbooks).

Recalling the political parties' complaint that Rs 200 crore spent on printing the textbooks would go waste if Samacheer Kalvi was not implemented this year, she said after the distribution of books it came to light that there were lot of factual errors. They had wrongly printed even the date of birth of K. Kamaraj and Lal Bahadur Shastri, she pointed out.

Intervening in the discussion, School Education Minister C.Ve. Shanmugam said that the textbooks had mostly pictures and there was an attempt to poison the young minds by references to Dravida Munnetra Kazhagam (DMK) repeatedly.Leaders of the Left parties in the House said they were for the implementation of the Samacheer Kalvi this year and at the same time for distribution of textbooks with corrections.

Factual errors

Replying, Chief Minister wondered how it would be possible to distribute the textbooks printed with factual errors and at the same time modify them.

Desiya Murpokku Dravidar Kazhagam (DMDK) recorded in the House that the party stood by the government on this issue.

Courtesy_

Also read the related stories

State government yet to notify RTE rules

LIFFY THOMAS

CHENNAI, August 23, 2011

The six weeks' time given by the Madras High Court to the State government to notify the rules under the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009, has elapsed and the delay is causing concern to activists and academicians.

It was on June 28 this year that the Madras High Court directed the government to notify the rules within six weeks.

Academicians say notifying the rules is important for the State to implement the provisions of the RTE Act. The draft rules prepared after consultation with various stakeholders in the State for implementation of the Act was submitted in April 2011, after which it was sent to be cleared by different departments, including Law.

At least 13 States, including Andhra Pradesh, Arunachal Pradesh, Himachal Pradesh, Manipur, Orissa, Sikkim, Chhattisgarh, Madhya Pradesh, Rajasthan and Mizoram, have so far notified their rules.

"Notifying means prescribing the rules precisely on how the Act should be implemented. Also, gaps in the original Act can be filled only through the notification," said K. Shanmugavelayutham, convener, Tamil Nadu Forum for Creche and Childcare Services (TN-FORCES).

Henri Tiphagne, Special Representative for Tamil Nadu, National Commission for Protection of Child Rights, said the RTE rules have to be notified not just to get more clarity but for the State to constitute the State Commission for the Protection of Child Rights. "Cases of child sexual abuse and corporal punishment are increasing in the State. In the last 15 days, we received two such complaints. If we had an Act, there would be more clarity on the action," said Mr. Tiphagne.

"Process is on"

An official of the School Education Department said the process to notify the rules under the RTE Act was still on and would be published soon.

The RTE Act asks private educational institutions to reserve 25 per cent of their seats to underprivileged children from their neighbourhood, not to detain children up to class VIII, to have an ideal student-teacher ratio, constitute school management committees and to offer quality education, among other things. While the School Education Department has issued circulars to schools to implement a few of the provisions of the RTE Act, experts say notification was needed to fully carry out the mandate of the legislation.

"Once the final rules are out, the State should concentrate on appointing more qualified teachers for government schools, and also look at the infrastructure availability in schools – both as per mandated by the RTE," Mr. Shanmugavelayutham added.

Courtesy_

Also read the related stories

தமிழகம்சமச்சீர் கல்வியைப் படிக்கும் பிள்ளைகள் எப்படி தேறப் போகிறார்கள்? முதல்வர் ஜெயலலிதா கவலை

First Published: 23 Aug 2011 02:28:43 AM IST

சென்னை, ஆக. 22: சமச்சீர் கல்விப் புத்தகங்களைப் படிக்கும் பிள்ளைகள் எப்படி தேறப் போகிறார்கள் என்று எனக்குக் கவலையாக உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கூறினார்.

பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது இது குறித்துப் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

ரூ. 200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்விப் புத்தகங்களை விநியோகம் செய்துவிட்டோம். அதில் காமராஜரின் பிறந்த தேதி, லால்பகதூர் சாஸ்திரியின் இறந்த தேதி ஆகியவை தவறாக இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இந்த லட்சணத்தில் பாடப் புத்தகங்கள் இருந்தால் அதைப் படிக்கும் பிள்ளைகள் எப்படி தேறப் போகிறார்கள் என்று எனக்குக் கவலையாக உள்ளது' என்று அவர் தெரிவித்தார்.

சமச்சீர் கல்வி தொடர்பாக சட்டப்பேரவையில் நடந்த விவாதம்:

சட்டப்பேரவைப் பாமக தலைவர் ஜெ. குருநாதன் (ஜெயங்கொண்டம்):

மெட்ரிகுலேஷன் பள்ளிகளைத் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்திக் கொண்டே மறுபுறம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளைத் தொடங்க அனுமதிப்பது சரியல்ல.

சமச்சீர் கல்வி நடைமுறையில் வந்த பிறகு மெட்ரிகுலேஷன், ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன் போன்ற கல்வி வாரியங்கள் இயங்குவது தேவையற்றது. இவற்றை கலைத்துவிட்டு அனைத்துப் பள்ளிகளையும் சமச்சீர் கல்வி வாரியம் என்ற ஒரே வாரியத்தின்கீழ் கொண்டு வரவேண்டும்.

சமச்சீர் கல்வி வந்த பிறகு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்குத் தனியார் பள்ளிகள் மாறி வருகின்றன. மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயங்கள், நவோதய வித்யாலயங்கள் தவிர தனியார்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி பள்ளிகள் நடத்த அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசிடம் தமிழக அரசு இதை வலியுறுத்த வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம்:

உள் கட்டமைப்பு, ஆசிரியர்கள் நியமனம், சிறந்த நிர்வாகம், சாதகமான சுற்றுச்சூழல் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பிறகு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிருந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதா: பாமகவின் கொள்கை நிமிடத்துக்கு நிமிடம் மாறுகிறது. சமச்சீர் கல்வியை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அரைவேக்காட்டுத் திட்டமாக இருக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை சீர்படுத்தி நிறைவேற்ற கால அவகாசம் தேவை என்றுதான் கூறினோம்.ஆனால், கம்யூனிஸ்ட், பாமக போன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சமச்சீர் கல்வியை இப்போது இருக்கும் நிலையிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு உள்கட்டமைப்பு பற்றியெல்லாம் கவலை இல்லை. நீதிமன்றமும் உத்தரவிட்டுவிட்டது. நாங்களும் அமல்படுத்தி விட்டோம். இப்போது அது சரியில்லை, இது சரியில்லை என்று அங்கலாய்த்துக்கொண்டால் என்ன செய்வது?

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம்:

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் பல இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று குறிப்பிட்டு அடைப்புக்குறிக்குள் திமுக என்று எழுதியுள்ளார்கள். ஹிட்லரைப்போல நச்சுக் கருத்துகள் திணிக்கப்பட்டுள்ளன. அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் நாடக வளர்ச்சிக்காகப் பாடுபட்டதாக புத்தகத்தில் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கருணாநிதியை கைது செய்யும்போது அவர் நடத்திய நாடகத்துக்காக அவர் பெயரை சேர்த்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

சட்டப்பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். ஆறுமுகம் (வால்பாறை):

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்திக் கொண்டே அதிலுள்ள குறைகளை முழுமையாகக் களைய வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொறடா கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்):

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியில் ஏராளமான குறைகள் உள்ளன. திட்டத்தை அமல்படுத்திக் கொண்டு அதன் குறைகளை முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரைப்படி களைய வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்தினோம்.

முதல்வர் ஜெயலலிதா: இது நடைமுறையில் எப்படி சாத்தியமாகும்? சமச்சீர் கல்வியும் வேண்டும். அதில் சீர்திருத்தங்களும் கொண்டுவர வேண்டும் என்றால் ஒரே நேரத்தில் எப்படி முடியும்? என்றார்.

Courtesy_

Also read the related stories

தமிழகம்எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவுத் திட்டமே முன்னோடியானது: முதல்வர்

First Published: 23 Aug 2011 02:23:55 AM IST

சென்னை, ஆக. 22: எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவுத் திட்டம், நாட்டுக்கே முன்னோடியான திட்டம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ். ஜான் ஜேக்கப் (கிள்ளியூர்), காமராஜர் எனது தலைவர், அண்ணா எனது வழிகாட்டி என்று எம்.ஜி.ஆர். தெரிவித்தார். அதனால்தான் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டமாக்கினார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா பேசியது:

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தைப் பார்த்துதான் சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்ததாக காங்கிரஸ் உறுப்பினர் ஜான் ஜேக்கப் கூறினார். அதிலிருந்து நான் மாறுபடுகிறேன். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் ஒரு சில பள்ளிகளில் ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டது.

1982-ல் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தபோது 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவு வழங்கப்பட்டது. கருவுற்ற தாய்மார்கள், அரசின் உதவித் தொகை பெறும் முதியோர்கள் ஆகியோருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டது. வழங்கப்பட்டும் வருகிறது.

1982-ல் இந்தத் திட்டத்தை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தபோது பலரும் கிண்டலும் கேலியும் செய்தார்கள். காங்கிரஸôர் நையாண்டி செய்தார்கள். மாணவர்களுக்கு தட்டைக் கொடுத்து பிச்சைக்காரர்களாக்கி விட்டார்கள் என திமுகவினர் கேலி செய்தனர்.

ஆனால், இந்தத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டமே முன்னோடியானது. இந்தியாவிலேயே அதற்கு ஈடான திட்டம் எதுவும் இல்லை என்றார் முதல்வர் ஜெயலலிதா.

Courtesy_

Wednesday, 10 August 2011

Samacheer Kalvi: SC and HC judgments


தினமணி: எது சமச்சீர் கல்வி?


எது சமச்சீர் கல்வி?

First Published: 10 Aug 2011 07:58:14 AM IST

சமச்சீர் கல்வியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் முன்பாகவே, "தீர்ப்பைத் தமிழக அரசு ஏற்கும்' என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து விட்டதால், இக்கல்வியாண்டு முதலாக தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி உறுதியாகிவிட்டது. 

இனி பள்ளிகள் எல்லாவற்றிலும் பாடநூல் விநியோகமும், கற்பித்தல் பணியும் தொடங்கிவிடும். தமிழகப் பள்ளிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவிய இரண்டும்கெட்டான் நிலைமைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்பதுவரை மகிழ்ச்சி.

தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவான பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக, 2006-ம் ஆண்டு முதலாகத் தொடர்ந்து குரல் கொடுத்தது மற்றும் வழக்குத் தொடுத்ததில் பொதுவுடைமைக் கருத்துச் சார்புள்ள அறிவுஜீவிகளுக்கும், சில கல்வியாளர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இவர்களது கோரிக்கை தி.மு.க. அரசால் ஏற்கப்பட்டு, 2010-ல்தான் தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி அளவில் ஒரு வகுப்புக்கு மட்டும் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது.

இதுநாள்வரை, சமச்சீர் கல்விக்காகக் குரல் கொடுத்த இவர்கள், தற்போது தங்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தால் அது தவறு. இப்போதுதான் அவர்கள் களத்தில் நின்று காணவும், குரல்கொடுக்கவும் வேண்டிய உண்மையான தேவை மேலதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முழுமையாக அமலுக்கு வந்துள்ளதன் மூலம் மாநில கல்விச் சூழலில் இரண்டு வகையான புதிய நிலைமைகள் இயல்பாக உருவெடுத்துள்ளன.

முதலாவதாக, அனைத்துப் பள்ளிகளும் (சுமார் 45,000 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுமார் 11,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், 25 ஓரியண்டல் பள்ளிகள், 50 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும்) ஒரே பாடத்திட்ட முறைமைக்கு மாறிவிடுவதால், பயிற்றுமொழியைக் கொண்டு, "தமிழ்வழிப் பள்ளிகள்', "தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகள்' என்ற இரு வகையாக மட்டுமே அவற்றை அடையாளப்படுத்த முடியும். 

அதேபோன்று, பயிற்றுமொழி மட்டும்தான் வேறு, பாடத்திட்டம் ஒன்றே என்பதால், கல்விக் கட்டணம்கூட, தமிழ்வழிப் பள்ளிகளுக்கானவை, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கானவை என்று இரு விதமாக அமைக்கப்பட ஏதுவான நிலைமை உருவாகியுள்ளது.

இரண்டாவதாக, மெட்ரிகுலேஷன் என்பதற்கு வணிக பலம் இல்லாமல் போனதால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறவும், அதுதான் சிறந்த கல்வி என்கிற தோற்றத்தை உருவாக்கவும் தனியார் பள்ளிகள் முயலும். சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாறுவதற்கும், புதிதாக இன்டர்நேஷனல் பள்ளிகளைத் தொடங்கவும் முயலும்.

வசதிபடைத்தவர்கள் தங்களது குழந்தைகளை அதிகமான கட்டணத்தில் வசதியான பள்ளியில் படிக்க அனுப்புவதை யாரும் குறை சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். உரிமையும்கூட. ஆனால், ஓர் ஏழைக் குழந்தைக்கும் அதே தரத்திலான பாடத்திட்டம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கருத்து. அதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கடமையும்கூட. அதற்கேற்ப சமச்சீர் பாடத்திட்டத்தையும், குறைகள் இருப்பின் நீக்கிச் சரி செய்ய வேண்டும் என்பதுடன் கற்பித்தலில் ஆசிரியர்களைப் பொறுப்பேற்கச் செய்வதும் மிகவும் அவசியமாக இருக்கிறது.

ஏனெனில், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற அரசாணை காரணமாக, எந்தவித நிபந்தனையும் கட்டுப்பாடும் இல்லாமல், வகுப்புக்கே வராத மாணவர்களையும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் நிலைமை - குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது. வகுப்புக்கே வராத "ஆல் பாஸ்' மாணவர்கள் 9-ம் வகுப்புக்கு வரும்போது, தமிழைக்கூட படிக்கத் தெரியாதவர்களாக வருகிறார்கள். இவர்களையும் எப்படியோ 10-ம் வகுப்புக்குத் தள்ளிவிடும் வேலையையும் ஆசிரியர்கள் செய்துவிடுகிறார்கள்.

மாணவர் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியர் பணியிடங்கள் குறையும்; இடமாற்றம் நேரிடும் என்பதற்காக, பள்ளிக்கே வராத மாணவர்களையும் வருகைப் பதிவேட்டில் தொடர்ந்து வைத்திருந்து பாஸ் போடுவதும், பாடங்களை நடத்தாமல் இருப்பதும் ஊரகப் பள்ளிகளில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கற்பித்தலுக்குப் பொறுப்பேற்கச் செய்யாமல் பாடத் திட்டங்களை சி.பி.எஸ்.இ.க்கு இணையானதாக, தரமானதாக, சமச்சீராக அளித்தாலும், ஏமாற்றத்துக்கு ஆளாவது ஏழைக் குழந்தைகள்தான்.

பள்ளிகளில் மாணவர்களை மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. தற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள் மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில் தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்.

கற்பித்தல் குறைபாடுகளைக் களையவும், களைய முடியாத நிலையில் அத்தகைய ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரமுள்ள அமைப்பாக பெற்றோர்-ஆசிரியர்- அமைப்போ அல்லது ஏதாவது ஒரு பாரபட்சமற்ற கண்காணிப்பு அமைப்போ செயல்படுவதுதான் இதற்கு ஒரே வழி.

செல்வந்தர் வீட்டுப் பிள்ளைக்குத் தனியார் பள்ளியில் கிடைக்கும் அதே கல்வி, சாதாரண ஏழைக்கும் கிடைக்கச் செய்யும் ஒரே விதமான பாடத்திட்டத்துக்குப் பெயர்தான் சமச்சீர் கல்வியே தவிர, தரம் குறைந்த கல்வித்திட்டமல்ல. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற வகையில், அடித்தட்டு மக்களுக்கும் சர்வதேச அளவிலான தரமான கல்வியை அரசு வழங்குவதுடன், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், தகுந்த ஆசிரியர்களையும் உறுதிப்படுத்துவதன் மூலம்தான் சமச்சீர் கல்வி என்பது உறுதிப்படுத்தப்படும். தனியார் பள்ளியில் கற்பித்தலுக்கு ஆசிரியரைப் பொறுப்பேற்கச் செய்யும்போது, அரசுப் பள்ளிகளில் மட்டும் ஏன் தயக்கம்? இந்தத் தயக்கம்தானே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

சமச்சீர் கல்வி அவசியம். அதே நேரத்தில், கற்பித்தலில் சமநிலையை உறுதிப்படுத்துவதும் மிகமிக அவசியம்.

Courtesy_

Disclaimer

This Blog Spot is meant for publishing reports about the usage of RTE Act (The Right of Children to Free and Compulsory Education Act, 2009) so as to create an awareness to the general public and also to keep it as a ready reckoner by them. So the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".Furthermore, the Blog Authors are no way responsible for the correctness of the materials published herein and the readers may verify the concerned valuable sources.

Labels

10 Kms. (1) 1993 (1) 2005 (1) 2009 (1) 2010 (1) 2012 (2) 2013 (2) 2014 (1) 2015 (2) 2016 (1) 2018 (1) 2019 (1) 25% Quota for Poor Students (7) 5th Standard (1) 8th Standard (1) Abdul Kalam (1) ABIDe (1) Accountancy (1) Act (2) Admission criteria (2) Aided Schools (3) Allahabad High Court (1) Amendment (1) Andhra Pradesh (1) Answer Sheet (2) Article (22) Avinash Mehrotra case (1) Bangalore (1) Bar-coded Answer Sheet (1) Bare Acts (1) Best Teachers Awards (1) Bihar (1) Bill (1) Biology (1) Board Exams (6) Botany (1) Caning (1) Cartoon (1) CBSE (5) Character Code (1) Cheating (1) Chemistry (1) Chennai (1) Chief Minister (1) Child Rights and You (CRY) (1) Children (3) Christians (1) CIC (1) Closure (1) Commission for Protection of Child Rights (1) Compulsory pass (1) Corporal punishment (1) Curse (1) Delhi High Court (2) Demerits (1) Diary (1) Dinamalar (4) Dinamani (8) Directory (1) Disobeying order (1) Display Board (1) Do's and Don'ts (1) Do's and Dont's (1) Don Bosco School (1) Download (2) Dress Code (1) Editorial (1) Education (4) Education Department (2) Exam Materials (1) Examinations (16) FAQs (1) Fee defaulter (1) Fees Determination Committee (2) Fees Determination Rules (1) Fine (1) Five Judges Bench (1) Foolish Policy (1) Frontline (1) Fundamental Right (2) Gazette (1) Goa CM (1) Good Manners (1) Govt. Schools (4) Govt. Servants (1) Grace Marks (1) H.Sc. (7) Hair cut (1) Hills (1) How to Learn (1) HRD Ministry (1) Implementation (1) Income Certificate (1) Indian Kanoon (2) Interview (1) Judgment (2) Karnataka (2) Kids (3) KUSMA (1) Labour Acts (1) Labour Laws (1) Links (3) Madras High Court (7) Madurai (1) Madurai Bench (1) Manapet Govt. School (1) Maths (2) Matriculation Schools (2) Merits (1) MGR (1) Mid Day Meal Scheme (1) Minimum Land requirements (3) Minor School Students (1) Minority Institutions (1) Mountains (1) National Building Code (1) NCF (1) New Indian Express (1) New Pattern of Exam (1) NGO (1) Online (1) Opinion (1) Parents (2) Personal Liberty (1) Plus 1 Exam (1) Plus 2 Exam (7) Politicians (1) Pondicherry (10) Poor Students (2) Practical Examination (1) Preparedness (1) President of India (1) Private Schools (8) Public Exam (1) Punishment (1) Punjab (1) Question Paper (3) Recognition (3) Results (4) Right to Life (1) RTE Norms (1) RTE Rules (2) RTI (1) RTO (1) Rules (1) S.V.Chittibabu Commission (1) Safety standards (1) Salient features (1) Samacheer Kalvi (6) School Bags (2) School Buildings (1) School students (1) School Vehicle (1) Schools (3) Science (1) Secondary Education Board Bill (1) Selling Books (1) Service Book (1) Song (1) SSLC (12) State Consumer Disputes Redressal Commission (1) Student (1) Summer Vacation (1) Supreme Court (5) Syllabus (1) Tamil Nadu (9) Tamil Subject (1) Teachers (3) Teachers' Day (2) THE HINDU (7) Thirukural (2) Three Judges Bench (2) Time Table (2) Times of India (1) TIPS (2) Toilets (1) Tough & Easy (1) Traffic Rules (1) Transfer Certificate (1) Two-wheeler (1) Unaided Schools (5) Uniforms (1) Upholding RTE Act (3) USE Act (1) Uttar Pradesh (1) Walking (1) Who's Who (1) Wikipedia (1) Window of opportunity (1) Young Wards (1) Zoology (1) எது சமச்சீர்க் கல்வி? (2) எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் (1) கல்வி கற்கும் வழி (1) தி இந்து (1) மன அழுத்தம் (1) முப்பருவ கல்விமுறை (1)

Popular Posts